28 January, 2015
தமிழ் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச வேண்டும்: மன்மோகன் சி்ங்
தமிழ் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச வேண்டும்: மன்மோகன் சி்ங்

புதுடெல்லி: இலங்கையில் சாமானிய மக்கள் படும் துயரம் கண்டு பெரும் துயரம் அடைந்துள்ளதாக என் கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சி்ங் , இலங்கை அரசு தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்களவையி்ல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகையில் இவ்வாறு கூறிய  பிரதமர், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர்களின் நிலை கவலை அளிப்பதாக கூறிய பிரதமர், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், .இலங்கையில் அரசியல் மறுவாழ்வு அவசியம் என்றும் கூறினார். 

  மேலும் இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும், தன்மானத்துடனும், சம உரிமையுடனும் வாழ, இலங்கை அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொருளாதார தாராள மய கொள்கை

அவர் மேலும் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொருளாதார தாராள மய கொள்கை அமல்படுத்தப்பட்டது என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் மத்தியில் அமைந்தன என்றும் காங்கிரஸ் தொடங்கி வைத்த பொருளாதார கொள்கையில் மாற்றம் செய்யப்படவி்ல்லை என்றும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 4லிருந்து 5 சதவீதம் வரையே பொருளாதார வளர்ச்சி இருந்தது என்று தெரிவித்த பிரதமர், 2006ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின்தான் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை தாண்டியது என்றார்.

கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகை படிபடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த பிரதமர், 2003-4ல் மதிய உணவு திட்டத்துக்கு ரூ.1375 கோடி செலவிடப்பட்டது என்றும் நடப்பு ஆண்டில் மதிய உணவு திட்டத்துக்கு ரூ.9,890 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

2001ல் பா.ஜ.க ஆட்சியில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.9,862 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் 2009இல் இருந்து 2013 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சாலை அமைக்க ரூ.56,201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சி்ங் கூறினார்.


 

தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!


COMMENT(S): 27

No.please give pressure to international community to give security to helpless women children and old people in Lanka immeiately now .At the same time donot give a chance to creat terror in TN by some of the selfish politicians who earn money from foreign disaporas to make this issue complicated.Some (please note not all) selfish foreign srilankan refugees use all possible ways in India and international level to creat emotional waves so that they can continue their illegal business.They are the reasons for Ltte leaders death at the last minute giving wrong advice and not help to escape from war zone(refer viruvirupu.com).TN people understand this truth.

ALL the money allocated by congress govenment are directed to the Karunanidhi Family Fund. jai hind !!!!

பிரதமர் அவர்ளே முடிவுரை எழுதச்சொனால் மீண்டும் தொடக்கவுரை எழுதபார்கிறீர்களே.

யார் யாரெல்லாம் தமிழ் தலைவர்கள்? வை கோ, கருணானிதி, நெடுமாறன், முதலமச்சர், போன்றவர்களா? தெளிவாகச் சொல்லுங்கள்!!!!

நாட்டின் பிரதமர் அரசுக்கொள்கைகள் என்ன என விவரித்து கூறி மக்கள் ஒத்துழைப்பை பெற வேண்டியவர்.னாட்டின் அரசியல் தலைவர்களை சமூக நலம் காக்க அரசியலமைப்பு சட்டம் பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டியவர்.அரசுக்கொள்கைகளை அவர்கள் பரப்ப களம் அமைத்து தர வேண்டியவர்.பேச்சு வார்த்தை அரசு நடப்பில், அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கவில்லை.எல்லாம் எழுத்தும் மூலம்தான்.மக்களை கூட்டி அதிர்வு சூழல் உருவாக்காத செயல்பாட்டிற்கே கட்சிகள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதினிதிகள்.

காங்கிரசை ஒழித்துக்கட்டினாலே போதும்.. தமிழர்கள் விடுதலை பெறுவார்கள்... (முக்கியமாக நாட்டில் குண்டு வெடிக்காது..)

உலகத்திலேயே மோசமான பிரதமர்.உன்னாலே சீக்கியர் இனத்துக்கே அவமானம்.

காங்கிரஸ் அரசு தன் இடைத்தரகர் வேலையை ஆரம்பித்துவிட்டது.

ஈழத்தமிழ் தலைவர்களை மிரட்டும் தொணியில் காங்கிரஸ் அரசின் பேச்சு உள்ளது.

சர்வதேச விசாரணை என்று வந்துவிட்டால் இலங்கைப்போரை நடத்திய காங்கிரஸ் அரசும் பதில் சொல்லவேண்டி வருமே
அதனால்தான் ஈழ தமிழ் கட்சிகளை "பேச்சுவார்த்தை" என்ற சொல்லை பயன் படுத்தி சர்வதேச தலையீடு இல்லாமல் மீண்டும் ஐ.நா விவகாரத்தை நீத்துபோக செய்ய காங்கிரஸ் முயற்சி செய்வது தெளிவாகிறது

இதுவரை தமிழ் தலைவர்கள் பேசியது போதாதா? சிங்கள அரசு தமிழர்களுக்கு என்ன கொடுப்போம்? என்ன செய்வோம்? என்பதை முதலில் சொல்லட்டும்.

"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சாலை அமைக்க ரூ.56,201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது" - அதில் (குறைந்தபட்சம் 10%) 5620 கோடி காங்கிரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கும் ஒதுக்கப்பட்டது

His head have hair only......inside nothing...............

"தமிழ் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச வேண்டும்: மன்மோகன் சி்ங்" மன்னு சிங் ஒருவழியா வாய தெறந்துட்டார்???

இவர் என்ன சிரிலங்கா சுதந்திர கட்சியா நீலத்தொப்பியோட இருக்கிறார். அவருடைய பேச்சும் அப்படித்தான் இருகிறது.

There is plenty of evidence that they killed innocents. Killers should be punished. What is there to talk with guilty

பிரதமர் மன்மோகன் சி்ங் , இலங்கை அரசு தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இருந்த ஒரே தலைவனை கொன்ற இந்தியர் , எந்த தலைவருடன் பேச சொல்கிரார் ,புரியவில்லை. தமிழ் இன துரொகிகளான கருணாவீட்மோ, டாக்ளஸூடாணோ பேச சொல்ரார் போல.

எந்த முகத்தோடு பேச வருவார்கள். அறுபது எழுபது வருசமாக பேசி பேசி நாங்கள் கன்டது பல லட்ச்சம் மக்களை பறி கொடுத்தது தான். இந்தியாயும் இதையே எமக்கு சொல்லி சொல்லித் தான் இலங்கைக்கு உதவி செய்து எங்களை அழித்தார்கள். உலகம் எங்களுக்கு உதவ வரும் போது எங்களை ஏமாத்த சோனியவும் சிங்கும் போடு நாடகம் இது. தமில் மக்களே இவர்களை நம்பவேன்டாம். இந்திய ஆழும் காங்கிரசின் உதவி இல்லாமல் மேற்குலகை இனைத்து போரடுங்கள். வெற்றி கிட்டும்.

ஆஹா.... தமிழர்கள் பொறுமை எல்லை கடந்துவிட்டது என்பது இங்கே தெரிவிக்கப்படும் கருத்துக்களில் தெரிகிறது. ஈழம் மலரும் நாள் நெருங்கி வருகிறது. ஆங்காங்கு ஆரம்பிக்கும் இந்த நெருப்பு பரவி படர்ந்து தமிழ் ஈழத்தை சாம்பலில் இருந்து எழச் செய்ய வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன் சிங் கூறினார் - அவரு 'இத்தாலி'ன்ற வார்த்தைய முழுங்கிட்டாருங்க!!

அழுவாணி மூஞ்சில இருக்கிறாரு. சோனியாகிட்ட எதுக்காச்சும் வாங்கி கட்டிட்டாரோ.

ஏதாச்சும் ஒரு சீக்கியனோட தலைப்பாய கழட்டி வெடி குண்டு இருக்கா துப்பாக்கி இருக்கான்னு செக் பண்ணா உட்னே குய்யோ முறையோன்னு பார்லிமென்டுல குதிக்கரீங்க. இப்ப தமிழன இலங்கைல அடிச்சு கொல்ரப்போ பேச்சு வார்த்தை நடத்தணுமா? உன்னை சொல்லி குற்றம் இல்லை கருங்காலிகளை சுயனல வாத தமிழ் துரோகிகளை எம்.பி.யா தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அமிச்சு வைச்சோம்ல எங்கள சொல்லணும்.

எந்த பேச்சுக்கும் இடமில்லை. தேவை போர்குட்ற விசாரணை

பாகிஸ்தான் நம்முடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறதே, அந்த மாதிரியா?

இதை சொன்னால் போதுமா ?. நடவடிக்ககை வேன்டாமா ? என் சகோதர, சகோதரிகலின் பாவம் சும்மா விடாது. நீ, சோனியா, சிதம்பரம், கருணா, வாசன் எல்லாம் நல்லா இருக்க மாட்டீங்க. நம்பிக்கை துரோகிகலா.

அட போய்யா! ஆயுதங்களையும் கொடுத்து ராணுவ அதிகாரிகளையும் அனுப்பிவைத்த உன் கோர முகம் எங்களுக்கு தெரியும்!

Displaying 1 - 24 of 24
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook