02 February, 2015
இலங்கை பிரச்னை: போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள் !
இலங்கை பிரச்னை: போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள் !

சென்னை: இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க் குற்ற விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை. லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும்,

இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவர்கள் கண்டித்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சண்முகப்பிரியன், ஜோ.பிரிட்டோ, பால் கெனப், லியோ ஸ்டாலின், திருக்குறள் திலீபன், பிரசாத், அந்தோணி சாஜி, அனிஷ் குமார் ஆகிய  மாணவர்கள் இன்று காலை லயோலா கல்லூரி அருகில் உள்ள ஏ.ஐ.சி.யு.எப்.எனப்படும் அகில இந்திய கத்தோலிக்க ஃபெடரேசன் அலுவலக வளாகத்திற்குள், அவர்களது அனுமதியை பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தொடர்ந்து அவர்கள், ராஜபக்சே ஒழிக, இந்திய அரசே பாரபட்சம் காட்டாதே, அமெரிக்காவே தீர்மானம் என்று நாடகமாடாதே, இலங்கை மீது பொருளாதார தடை விதியுங்கள், ஈழத்தமிழர்களை காப்பாற்ற பொது வாக்கெடுப்பு நடத்து...என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.மேலும் இந்த வாசகஙகள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் கைகளில் தூக்கி பிடித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டதை தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.

அதே சமயம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, இதர மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.பின்னர் அவர்கள் அருகில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டபோது, கல்லூரி காவலர்கள் வாயிலை மூடியதால், அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து முழக்கங்களை  எழுப்பியபடியே தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு சென்றனர்.

 

இதனிடையே இது குறித்து தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு விரைந்துவந்தனர். மாணவர்கள் வெளியே வந்துவிடாதவாறு, வாயிலுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்..

வரிகொடா இயக்கம்

முன்னதாக உண்ணாவிரததிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற  லயோலா கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள், ", மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் " என்று கூறினர்.

மேலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால், தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தவிடாதபடி நாங்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

படங்கள்: ஸ்டீவ்ஸ்

 

 

தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!


â®†ì˜ ê£Œv

COMMENT(S): 55

போராட்டம் வெல்லும் ...

Loyola on action. Wish them all the best. They are the voice of Tamil Nadu. With out any political influence they came on road to fight against the Srilankan war crimes and the crime against our fishermen.Please support them. We may find young leader at the end of agitation to replace all these dravida kazhagam.

மாணவ தோழர்களே மிகுந்த மகிழ்ச்சி; வாழ்த்துக்கள்; இந்தியாவில் ஒரு அமைதி புரட்சி தோன்றியது போல் உள்ளது; போராட்டம் மாணவர் சமுதாயம் கையில் எடுத்து உள்ளதால் இனிமேல் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களும் , பொதுமக்களும் பங்கேற்று இது மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது; இனிமேலும் இலங்கை தப்பிக்கொள்ள அனுமதிக்ககூடாது; இலங்கை பிரச்னையை வைத்து முதலில் தி மு க வும் அ தி மு க வும் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். வேண்டும் என்கின்றபோது டெசோ , தேவை இல்லை என்கின்றபோது டெசோ கலைப்பு; செய்தது இதே கருணாநிதி தான். அதிமுகவும் 1991 முதல் 1996 வரை ராஜீவ் கொலையை வைத்து இலங்கை என்றாலே தீவீரவாதம் என்று அச்சுறுத்தியது. ஈழத்திற்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ "பொட" சட்டத்தின்கீழ் 19 மாத காலம் சிறை வைக்கப்பட்டார். பின்பு கருணாநிதி ; இப்படித்தான் இலங்கை தமிழர் போராட்டத்திற்கு இந்தியாவால் பின்னடைவு. ஒரு ராஜீவ் கொலையை வைத்தே இப்படி தமிழர்களை அழிக்க இந்திய காங்கரஸ் அரசு இலங்கை உடன் கூடி குலாவியது. நம்மின் தற்போதைய தேவை, ஜெனீவா வில் நடைபெறும் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்தில் "இனப்படுகொலை" என்ற வார்த்தை இடம்பெறவேண்டும். அதை காங்கரஸ் செய்யுமா ? கருணாவும் தி மு க வும் 2009 ல் காங்கரஸ் உடன் சேர்ந்துகொண்டு தமிழ் உணர்வாளர்களை, குறிப்பாக வைகோ வை என்ன பாடு படுதீநீர்கள் என்று உலகுக்கே தெரியும். இப்பொழுது நீலிக்கண்ணீர்; உங்களுக்கு இன்னும் மத்திய ஆட்சி பதவியில் இருந்து விலக ஆசை இல்லையா ?. ஓஹோ ஒரு வேளை 1999 ல் இருந்து 2004 வரை பாரதிய ஜனதா ஆண்ட மத்திய ஆட்சியில் இருந்துகொண்டு, முரசொலி மாறனுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சைகளை செய்துவிட்டு, பின்பு பிஜேபி அரசை மதவாத அரசு என்று கூறிக்கொண்டு, ஆட்சி முடியும் தருவாயில் பதவி விலகிக்கொண்டு, அப்புறம் காங்கரஸ் உடன் கூட்டணி அமைத்து, அடுத்த 5 ஆண்டுகள் பதவி சுகத்தை நீங்களும் தி மு க வும் அனுபவித்தீர்கள். (2004 ல் நடைபெற்ற தேர்தலில், நீங்கள்தான் பூந்தமல்லி "பொடா" நீதிமன்றத்திற்கு சென்று வைகோ விடம் கெஞ்சி கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவும், ஜாமீனில் வெளிவரவும் கேடீர்கள் ) . இது அணைத்து செய்தித்தள்களிலும் வந்தது. ஆகா மொத்தத்தில் 1999ல் இருந்து 2013, இப்பொழுது வரை, எப்பாடு பட்டாவது பதவி சுகத்தில் திளைதீர்கள். தற்பொழுது மத்திய அரசில் இருந்து கழண்டு கொள்ள ஒரு கரணம் கருணாவுக்கு தேவை; ஏன் என்றால் அடுத்த தேர்தலில் காங்கரஸ் க்கு ஆப்புதான். அதை இப்பொழுதே தெரிந்து கொண்டு நாடகம்; உண்மையானவர்களாக இருந்தால் எப்பொழுதோ நீயும் உன் குடும்பமும் எப்பொழுதோ விலகி இருப்பீர்கள்; உங்களுக்கு தெரியும் ; தற்பொழுது பதவி விலகினால் ஜெயலலிதா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ரௌண்டு கட்டுவார் என்று பயந்தே பதவி விலக மறுக்கிறாய்; இதை வைகோவோ அல்லது வேறு தலைவர்களோ கேட்டால், கேள்வி கேட்பவர் மீது அவர்களுக்கு "பதவி ஆசை -உள்ளே வர " ஆசை என்று கூறி தப்பிக்கிறாய் . கடந்த 60 ஆண்டு காலம் சிங்கள இனம் , (ஒரு கொசுறு நாடு), இந்தியனை , இந்திய தமிழனை , இலங்கை தமிழனை அழிக்கும் முயற்சியை உங்கள் போராட்டம் ஒடுக்கும். வாழ்த்துக்கள் . அணி திரளுங்கள் "மக்கள் தலைவர்" "மக்கள் சக்தி" "மக்கள் போராளி" வைகோ பின்னால் ; உங்கள் போராட்டத்திற்கு முதலில் வாழ்ததுசொன்ன தலைவர் வைகோவே.

வீரம் மிகுந்தவர்களை கொன்றால்,மீதித் தமிழன் பயந்து பேசாமல் இருப்பான் என்ற சிலரது நம்பிக்கையை தளர்த்தும் உங்களிற்கு நன்றிகள் பல.

"இருப்பாய் தமிழா நெருப்பாய், நீ இருந்தது போதும் செருப்பாய்"

வன்முறையும், அரசியலும் கலக்காமல் இதை முன்னெடுத்துச் சென்றால், மாணவர்கள் போராட்டம் சிலரது நிலைப் பாட்டை வெளித் தோற்ற அளவில் மாற்றக் கூடும். ஆயினும், ஈழத்துக்கு தீர்வு ஈழ மண்ணில் இருந்தே எழ முடியும். அதற்கு துணை நிற்கக் கூடிய நேர்மையும், துணிச்சலும் இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வந்தால் மட்டுமே, இன்றைய நிலையில் ஈழம் சாத்தியப் படும் என்று தோன்றுகிறது.

ஒரு ஒளி வெளிச்சம் தெரிகிறது .மாணவர்களே ஒன்று கூடுங்கள் .

மாணவர்கள் அமைதியாக போராடினால் எந்த தவறும் இல்லை ஆனால் அது வன்முறையில் போய் நிற்க கூடாது, மேலும் மாணவர்களின் முக்கிய கடமை படிப்பு தான் ஆனால் அதை கெடுக்க பலர் முயற்சி செய்கிறார்கள், காரணம் அவர்கள் இம்மாதிரியான விசங்களால் சிறிய அளவில் கூட பாதிக்கபட போவதில்லை, பாதிக்கபட போவது மாணவர்களின் வாழ்க்கை அதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்

Hats off to you students ! At least now you have wake up ! Please move forward this truth spark ! Do not fall for T.M.K or A.T.M.K. They all selfish politician. Please save those innecent balance tamils. Get justice for those die horrible horrible..way ! STUDENTS ...YES YOU CAN DO IT ! YOU ARE VERY POWERFUL. GOOD LUCK YOUNG BLOOD ! MAKE THE DIFFRENTS. PEOPLE PLEASE GO BEHIND THEM ...SAVE TAMILS IN SRILANKA AND IN OUR TAMIL NADU ! TAKE AWAY CONGRESS FROM THIS COUNTRY ! TRUST VAIKO SIR !

எங்க சுப்பிய காணோம்? வன்முறை கின்முறை, தகாதசெயல்னு அலப்பறை பண்ண வரணுமே.. யாராச்சும் கண்டீங்களா?

all the best guys!! way to go!! late is better than never.. You guys are replanting faith in our dreams..

மாணவர் சக்தி ஒன்று திரண்டால் நிச்சயம் நற்செய்தி கிடைக்கும். கல்லாயிருக்கும் மண்ணு மோகனும் கடிதமெழுதும் ஜெயாவும் துரோகி முகவும் விழித்தெழ இந்த மாணவர்படை திரள வேண்டும். சுயனலமற்ற இளைய சமுதாயம் மலர வேண்டும். இட்த அரசியல் துரோகிகள் ஒழிய வேண்டும். ஈழத்தமிழர் விடுதலை பெறவேண்டும்.

வெல்லட்டும் ....... வெல்லட்டும்....... மாணவர் போராட்டம் வெல்லட்டும்......... மாணவர்களே....... எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இன்று வரை , தமிழகத்தின் எந்த பிரச்சனையானாலும் உண்மையுடனும் மனசட்சியுடணும் போராடும் , வைகோ போன்ற "மக்கள் தலைவர்" பின்னால் அணி திரளுங்கள். உங்களின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவி , மத்திய அரசை உலுப்பி , இலங்கையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வழிவகை செய்யவேண்டும். அதேபோல் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படவும் , அவர்களின் மீதான தாக்குதல் நிறுத்தப்படவும் உங்கள் போராட்டம் வழி வகுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் தோழர்களே!!! முத்துக்குமார் தன்னை மரித்த போதே ஆரம்பித்திருக்க வேண்டிய போராட்டம் இது...சூது தனமாக அப்போது கருணாநிதி தடுத்துவிட்டார்.
மாணவர் போராட்டங்களால் இவ்வுலகில் பல மாற்றங்கள் நிகழ்துள்ளது.
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மாணவர்களின் இன உணர்விற்கு பாராட்டுக்கள்.

ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்கு காரணமான
காங்கிரசும், திமுகவும் மீண்டும் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்கு மாணவர்கள் இத்தருணத்தில் உறுதி மொழி ஏற்கவேண்டும்

பல தேசங்களின் புரட்சிகள், மாற்றங்கள் மாணவர்களாலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவும் சாத்தியப்படும். வாழ்த்துக்கள் நண்பர்களே. ஆனால், எந்த அரசியல் கட்சியின் சாயத்தையும் பூசிக்கொள்ளாதீர்கள். அது உங்கள் போராட்டத்தின் போக்கை மாற்றி விடக் கூடும்.

மாணவர் புரட்சி வெடிக்க ட் டும் tamil eelam pirakadum valaka tamil nadu

பர்த்தயா சிங்கள சுப்ரமணி என் மக்களின் உணர்வை. நீயெல்லாம் மக்கிய மன்னுக்கு சமம்.

மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தடி சாக்கில் கருணாநிதி உள்ளே புகுந்துடுவார். பேரை தான் வாங்கிக் கொள்வார்.

வாழ்த்துக்கள் வரி கொடா இயாக்கம் தான் சரியான வழி....

When I was a college student in 80's we had a much bigger agitation and MGR closed the colleges for 2 weeks. What happened, here we are after 2 decades. I sincerely hope no kid is going to do something stupid in emotional state. I hope they go back to their parents and homes.

There are politicians playing with peoples's emotions. This must stop. Don't encourage these kids. This is all politics.

ஈழத்தமிழர் நாம் தனிய இல்லை. ந்ன்றி.

அமைதியான் முறையில் போராட்டம் செய்து அதில் வெற்றியும் பெற வாழ்த்துக்கள்80 கோடி நம் மக்கள். 1.5 இலச்சம் உயிர்களைப் பறிகொடுத்தும் தீர்வீல்லாமல் போனது நம்மிடையே உள்ள கையாலாத்தனம். ஒன்றுகூடினால், போராடினால் நம்மிடையே தலைவர்கள் என்று சொல்லி அரசியல் செய்யும் ஆட்களின் முகமீடியைக் கிழித்தெறியலாம்.

மாணவர்கள் திரண்டால் முடியும்

Thanks guys.If we demonstrate anything here, that is the end of our life. our name will be in missing person's list.It is the reality. as we can't say anything openly in public, we respect your support to us. we ignore the people who make silly commments

"காங்கிரசும், திமுகவும் மீண்டும் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்கு மாணவர்கள் இத்தருணத்தில் உறுதி மொழி ஏற்கவேண்டும்". ராஜுவின் இக்கருத்தை அனைவரும் கருத்தில் கொள்ளவும். மாணவர்கள் மட்டுமல்ல-அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். இனியும் இந்த ஏமாற்று அரசியல் சாக்கடைகள் வரக்கூடாது.

 Displaying 1 - 25 of 42
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook