25 January, 2015
வெனிசுலா அதிபர் மறைவு: கருணாநிதி இரங்கல்
வெனிசுலா அதிபர் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை: வெனிசுலாவின் சோஷலிச சாதனையாளர் சாவேஸ் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெனிசுலாவின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டின் இணையற்ற தலைவர் என்று புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் அறுவைச் சிசிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி வருகிறார் என்ற நல்ல செய்தி உலகெங்கிலுமுள்ள ஆதிக்க எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆறுதல் அளித்து வந்த நிலையில் திடீரென அவர் தனது 58வது வயதில் மறைந்தது என் மனதைப் பெரிதும் வாட்டுகிறது.

'வெனிசுலாவின் புரட்சி வீரர்' என்று புகழப்பட்டவர்தான் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிச அரசாங்கங்களில் முதல் இடம் வெனிசுலாவிற்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் சாவேஸ்தான். அண்மையில் அங்கே நடைபெற்ற தேர்தலில் சாவேஸ் நான்காவது முறையாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியில் தொடர்ந்தார்.

இந்த வெற்றிக்குப் பிறகு, தான் நினைத்த அரசியல் மாற்றங்களைச் செய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதத்தின்தான் கியூபா நகரிலே சாவேஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதற்கு பிறகும் முழுமையாக உடல்நலம் தேறாத நிலையில் தாயகம் திரும்பிய சாவேஸ்சுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாவேஸ் மறைந்து விட்டார்.

சாவேஸ்சின் அரசியல் ஆசான் பிடல் காஸ்ட்ரோ. இவருக்கு சேகுவேரா எவ்வளவு நெருங்கி, தோழமையோடு இருந்து புரட்சியில் பங்கெடுத்து அதில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தாரோ, அதைப் போலவே பிடல் காஸ்ட்ரோவின் சோஷலிசச் சித்தாந்தங்களிலும், புரட்சிகர யுக்திகளிலும் ஈடுபாடு கொண்டு மிகுந்த தோழமையோடு பழகியவர் தான் சாவேஸ்.

1998ஆம் ஆண்டு முதல் இதுவரை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவாலாக, உழைக்கும் சமுதாயத்தின் உன்னத உந்து சக்தியாக, லத்தீன் அமெரிக்காவின் பெருமைமிகு பிதாமகனாக, பதினான்கு ஆண்டுக் காலம் அந்த நாட்டின் குடியரசுத் தலைவராக சாவேஸ் புகழாட்சி செய்து வந்தார்.

அவர் மறைந்த செய்தி கேட்டு, அந்த நாட்டின் லட்சோபலட்சம் சாதாரண சாமான்ய மக்கள் ஆற்றாது அழுது புலம்பியதைத் தொலைக்காட்சியில் நான் கண்டபோது, நம்முடைய அண்ணா மறைந்த போது மக்கள் கதறியழுதார்களே, அந்த நினைவு தான் மேலோங்கிற்று.

போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய சாவேஸை புற்றுநோய் 58 வயதிலேயே பலி கொண்டு விட்டது. சாவேஸ்சின் மறைவு வெனிசுலா நாட்டிற்கு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், ஏன் பொதுவுடைமை தத்துவங்களைப் பின்பற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!


COMMENT(S): 27

உன்னை பத்து இங்கெ கருத்து பதியும் அனைவருக்கும் தெரியும் நீ

....

Hugo Chavez is known for Dictatorship in the Cuba, I am not surprised karunanidhi is mourning for a fallen dictator as he is one of those breed.

அவர் இரந்தடெ நல்லது அந்த்னட்டு மக்கலுகு. அவர் ஆட்சி ஒன்ரும் நல்லட்ஷி அல்ல. அவர் பெயர் தெரிடயும் என்பதர்காஅக அஞலி செலுதத கொஎடது.

பிரபாகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாரா?

Kalainger should be given respect for His age and experience. No body Can have His maturity and experience. Only His image Eelam issue Unnecessarily damaged by politicians in TN. Who ever may be act to à limit during Internal war in à country. Hè cannot stop THE war even hè pull out His support.This Iran international issue. People emotional comments Will not do any thing useful in This issue.

மனிதாபிமானத்தோடு இரங்கற்பா யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், பேசலாம் அதை கொச்சப் படுத்தக் கூடாது, இது கூட தெரியாமல் இங்கே எல்லாரும் 90 வயதில் உள்ளவரை திட்டி எழுதுவது அனாகரிகம்

நாம் வருந்தி கொடுக்கும் இரங்கற்பாவில் இறந்தவருக்கு நம்மை தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு தலைவர் நம் நாட்டிலே இறந்தாலும் எல்லொரும் வருந்துகிறோம், பத்திரிகைகளில் இறங்கற்பா கொடுக்கிறோம், ஆனால் அந்த தலைவருக்கு 100கோடி மக்களையும் அவர்களது பெயர்களையும் தெரியாது ஆனால் 100கோடி மக்களுக்கும் அந்த தலைவரை தெரியும்

அது போல சாவோஸை உலகத்திலுள்ள 100 அல்லது 120கோடி பேருக்கு தெரியும், அவருக்கு இவர்கள் அனைவரையும் தெரிந்திருக்க வேண்டியது என்பது அவசியமில்லை

மூளை என்றொன்று உங்களுக்கு இருந்தால் இந்த மாதிரியெல்லாம் பதிந்திருக்க மாட்டீர்கள்

வினோத் என்ற வக்கிரமனம் கொண்ட மனிதர் திருந்த வேண்டும். எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போகிறோம்.நீ என்னவோ பெரிய ###கி மாதிரி அடுத்தவரை ஏளனமாக எழுதுகிறாய்.

சரிதான்பா. அந்த ஆள் உயிருடன் தான் இருக்கார். நம்பிடோம்.

மனிதாபிமானத்தோடு இரங்கற்பா யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், பேசலாம் அதை கொச்சப் படுத்தக் கூடாது, இது கூட தெரியாமல் இங்கே எல்லாரும் எழுதுவது அனாகரிகம்... ஊர ஏமாத்தி டபாய்ச்சு வயிறு வளர்க்கும் ஜீவராசிகளுக்கு இந்த மரியாதையே ரொம்ப அதிகம்.

இங்கே எல்லாரும் 90 வயதில் உள்ளவரை திட்டி எழுதுவது அனாகரிகம்--- இந்த ஆள் வாழ்முழுதும் அடுத்தவர் அனைவரையும் திட்டிக் கொண்டே இருப்பவர்... இவருக்கு அதே டிரீட்மெண்ட்.. கரேக்ட்டே

3 லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது இத்தாலிக்காரியின் ### இந்த ### இப்போ எவனுக்கோ இரங்கற்பா வாசிக்கிறா#...இதில் தமிழினத்தலைவர் என்று பட்டம் வேறு..வேண்டுமானால், தமிழின அழிப்புத் தலைவர் என்று அழைக்கலாம்.

அது சரி கலைஞரே! எங்கேயோ இருக்கும் ஒருவரின் இறப்புக்கு அறிக்கை விடும் நீங்கள் பாலகன் பாலச்சந்திரனை நினைத்தாவது பார்த்தீர்களா?

All these ### here don't know manners and decency in expressing their opinions. They forgot that they would also die one day; but the difference is nobody will even remember their names. I feel sorry for these wastes.

எல்லாவற்றிலும் குறை காணும் ஊனமுற்ற(மன ஊனம்) நண்பர்களின் விமர்சனம்.....

தங்களின் "தராதரத்தை" வெளிப்படுத்துகிறது.....

சரி, திரு வள்ளிகுமார்...இங்கு '90 வயதானவரை' சிலர் திட்டி எழுதியது அநாகிரீகம். ஆனால், நாகரீகத்துக்கும், தி.மு.க. கும்பலுக்கும் இருக்கும் தூரம் எவ்வளவு என்பதை அறீவீரா?. அண்டங் காக்கை, குல்லுலக பட்டர், கோமாளி, மலையாளி, போய்.......பாபுவிடம் கேள், ....இவையெல்லாம் யார் கூறியது, யாரைக் குறித்து கூறியது என்பது உலகம் அறிந்தது. நாங்கள் அநாகிரீகத்தை நியாயப் படுத்த வில்லை. அது வேறு விசயம். ஆயினும், அவர் எத்தகையவர் என்பதை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

தலைவரே, நான் ஒன்று கேள்விபட்டேன்..உண்மையா? இறப்பதற்கு முன் சாவேஸ், ஸ்டாலின் நன்றாக செய்கிறார் அவர் தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று உங்களிடம் சொன்னாராமே!!

வள்ளி குமார் .... அய்ய ..... அதுக்காக சாமானியனுக்கு உழைத்து தானும் சாமானியனாக இருந்த ஒருவருக்கு சாமானியனை சுரண்டிக் கொழுத்த யாராவது இரங்கற்பா படித்தால் அது கேலிக்கூத்தாய்த்தான் பார்க்கப்படும்

விட்டால் சாவேஸ் திமுகவின் உறுப்பினர் என கூட சொல்வார். கேட்க தான் ஆள் இருக்கிறதே.

என்னய்யா இது! வாயை திறக்க விடமாட்டேனென்கிறார்களே!

முன்பெல்லாம் சென்னையின் மூன்று எம்.பி. தொகுதியையும் திமுக பிடிக்கும் வேளையில், படித்தவர்கள் நிறைந்த தொகுதிகள் என்பதால் என்று சொல்வார்களே. இப்போதோ, ஃபேஸ்புக், வெப்ஸைட் எல்லா இடங்களிலும் கும்மாங்குத்தாக இருக்கே. ஏனிந்த மாற்றம்? நடுநிலை பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சானல்கள் கூட இந்த போடு போடுதே. எங்கதான் போறது.

அட போங்க தாத்தா ###னு காத்துட்டு இருக்கோம்..

இது என்ன காமடியா இருக்கு? சாவேசு இந்த காமடிய பாக்கரதுக்கு நீ இல்லாம பொயிட்டயே செல்லம்.

சரி, நீங்கள் அறிந்து கொண்ட பாடம் என்ன?

58இல் மறைந்தாலும் அவர் மாமனிதனாக மறைந்துவிட்டார். சிலதுகள் 90 தாண்டியும் இருக்கின்றன.

முன்னே பின்னே தெரியாதவனுக்கெல்லாம் இறங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்(கள்!)... ஹிம்... எப்பொவோ...

Displaying 1 - 24 of 24
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook