உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க ராமதாஸ் ஆதரவு
உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க ராமதாஸ் ஆதரவு

சென்னை: மாநில அரசின் விருப்பப்படி, உத்தர பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் உணர்வுகளை மதித்து அந்த மாநிலத்தைப் பிரித்து 4 புதிய மாநிலங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய மாநிலங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆந்திரத்தில் தெலங்கானா, கர்நாடகத்தில் கூர்க், பிகாரில் மிதிலாஞ்சல்ஸ குஜராத்தில் செளராஷ்டிரா, மேற்குவங்கத்தில் கூர்காலாந்து, அசாமில் கூச்பிகார் என 20-க்கும் மேற்பட்ட புதிய மாநில கோரிக்கைகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் நாட்டின் வளர்ச்சியையும் பெருக்க முடியும் என்பதை உணர்ந்து புதிய மாநிலங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


COMMENT(S): 35

தமிழகம் இரண்டானால்... வேலைவாய்புகள் குறைந்தது 20% அதிகமாக வாய்புள்ளது.. என்ன சில லெட்டர்ஃபேட் தலைகலுக்கு பெரும் தலைவலியாக போய்விடும்...கூட்டம் காட்டனுமே...??!! சதவீத வாக்கு காட்டி "சூட்கேசு" வாங்கனுமே???? இதெல்லாம் சதவீதப்படி குறைந்துபோய்விடும்....

எனவே அறிவிப்பு வந்தால்... போராட்டம்..தீகுளிப்பு....என பல அமர்களம் நடக்கும்....

நிஜம் என்ன என்றால்.... எம்.ஜி.ஆர் காலத்தில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தந்த அறிக்கை படி... நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாது.... மத்திய அரசின் நிதியும் சற்று அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.... எடுத்து கட்டாக.... பாண்டிச்சேரிக்கு 800 கோடி நிதியுதவி...ஆனால் ஒட்டு மொத்த தமிழ் நாட்டிற்கு 1200 அளவில்...இரண்டாகும் போது குறைந்தது 1600 கிடைக்க வாய்ப்பு அதிகம்...இதுதான் தியரி... எனவே அப்போதைய முதல்வர் இது சரியாவாருமா???மதுரையா ..திருச்சியா????... என யோசிக்கும் போதே.... மு.க அவருக்கு துக்ளக் பட்டமளித்து ஏளனம் செய்ததோடு... மகனை மதுரைக்கு அனுப்பி வளத்துவிட்டார்.... இந்த உஷார் தாத்தா....பிற்காலத்தில் நிகழ்ந்தாலும் உதவியாக இருக்குமே....என்ற நப்பாசையோடு...

நல்லெண்ணத்தோடு இரண்டாக பிரிக்கப்பட்டால் நலமே....

அப்போ தானே தமிழ் நாட்டை ஏழா பிரிக்க கூப்பாடு போட கூட்டம் போடமுடியும்.

உ.பி யைப் பிரித்தால் அதைக் காரணம் காட்டி வட தமிழகத்தையும் பிரிக்க ரூட் போடுரார்ராமதாஸ்க்கு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற தீராத ஆசை, மாநிலத்தையும் பிரிங்க! பிரிங்க! அப்படினு கோசம் போட்டுட்டு அப்படியே தமிழ்நாட்டையும் பிரிங்கனு சொல்வாரு! தமிழ் நாட்டை நாலா பிரிச்சாலும் நீங்களும் உங்க மகனும் முதல்வராக முடியாது!

என்ன அவர் சாதி பகுதிகள தனியா பிரிச்சா அய்யா ஆட்சிய பிடிச்சு முதல்வராகிடலாம்னு கனவு காண்றாரோ,இவரின் ஆசை பகல் கனவாகவே என்றேன்றும் இருக்கும்.

நொய்யு நொய்யுனு ..சும்மா வாயை மூடிக்கிட்டு இரும்.
வெருப்பு தான் வ்ருது.

முதல்ல ப ம க வை காப்பாத்த வழி இருக்க யொசி இன்க அய்யா?

ஏன் நீங்கள் தைலாபுரத்தை 4 வட்டங்களாகப் பிரித்து மக்களிடம் கொடுத்தால் மக்கள் அப்பகுதியின் வளர்ச்சியை மிகச்சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள். இதற்கு ஆதரவு தருவீர்களா.

Vingesh..Your comment is chanceless...Somebody must tell it to him..
but he won't change..

ஐயா, நீங்க சொன்னது உத்தரபிரதேச மக்களுக்கு தெரியுமா?

சந்துல சிந்து பாடறதுல அய்யா கில்லாடி! எல்லா மாநிலத்தையும் பிரிங்க! பிரிங்க! அப்படினு கோசம் போட்டுட்டு அப்படியே தமிழ்நாட்டையும் பிரிங்கனு சொல்வாரு! தமிழ் நாட்டை நாலா பிரிச்சாலும் நீங்களும் உங்க மகனும் முதல்வராக முடியாது!

ஊழல் பண்ணாம இருந்தா எல்லா மாநிலமும் வளரும். நிர்வாகம் செய்ய இயலாத அளவுக்கு தமிழ்நாடு பெரிய மாநிலம் அல்ல.
என்ன அவர் சாதி பகுதிகள தனியா பிரிச்சா அய்யா ஆட்சிய பிடிச்சு முதல்வராகிடலாம்னு கனவு காண்றாரோ?

உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க ராமதாஸ் ஆதரவு: மாப்ல, நேத்து நாயர் டீ கடையல போட்ட பஜ்ஜில மாவு நல்லவா இல்லல. ஆமாம்டா மச்சான். ராமதாஸ்: சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதியின்... யோவ் அங்கிட்டு தள்ளி போய் தனியா பேசுயா, சும்மா நொய் நொய்ன்ட்டு..

தமிழ் நாட்டிலிருந்து தைலாபுரத்தை தனியாக பிரிக்க வேண்டும்.

"சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் நாட்டின் வளர்ச்சியையும் பெருக்க முடியும் என்பதை உணர்ந்து புதிய மாநிலங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்." - அப்படி செய்தால்தானே பிறகு தமிழ் நாட்டையும் பிரித்து நாமும் நம் கூடும்பமும் ஆட்சியை பிடிக்கலாம். நல்ல தீர்க்க தரிசனமான திட்டம் முயற்சியுங்கள்.

ராமதாஸ்க்கு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற தீராத ஆசை உள்ளது ஆனால் வட தமிழகமோ தென் தமிழகமோ மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை அதனால் உபி மாநிலத்தை பார்த்து இப்போதே தமிழகத்தில் துண்டுபோட்டு வைக்க பார்க்கிறார், இவரின் ஆசை பகல் கனவாகவே என்றேன்றும் இருக்கும்

Super comment Kishore

சார் சொல்லிட்டார்லெ, நடந்துடும்

அய்யா அடுத்த ப்ரதமர்.

அன்புமனி அடுத்த முதல்வர்.

பா ம க வை ரெண்டாக பிரிபதற்கு மாயாவதி ஆதரவு

மாம்பழத்த பிதுக்கிட்டாய்ங்க!!!!!!

அப்படியாவது அந்த எதாவது ஒரு மாநிலத்தில் பையனுக்கு மந்திரி பதவி கிடைக்காதான்னு நினைத்து இருக்கலாம்.....

அப்படியாவது அந்த எதாவது ஒரு மாநிலத்தில் பையனுக்கு மந்திரி பதவி கிடைக்காதான்னு நினைத்து இருக்கலாம்.....

இல்ல சுரேஷ் சார், அய்யா தமிழ் நாட்டை பிரிக்க சொல்லப் போறார். எற்கனவே வட தமிழ் நாடு, தென் தமிழ் நாடுன்னு பிரிக்கனும்னு சொன்னவர்......

இதுக்கு ஆதரவு தெரிவிச்சாதானே, நாளைக்கு தமிழ்நாட்ட இரண்டா பிரிக்கறதுக்கு அடி போட முடியும்?!

 Displaying 1 - 25 of 35
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook