29 January, 2015
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..!
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..!

பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு  திருத்தம்

- சி.சரவணன்

தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. 

மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.

தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!

இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு :
http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )

இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது. 

இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!

ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன். 

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?

இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.
 
எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!

தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!


COMMENT(S): 21

மீண்டும் அய்யாவின் ஆட்சியை கோண்டு வர்வோம்

இது சற்றூம் ஒற்றூக்கொள்ள்முடியாத் ஆதிரடி தினிப்பு . ஜ்யா அம்மா இப்படி செயிவது நல்லதல்ல.
Tamilnadu people expected very genuine and generous attitude from amma . But contrary to the people's expectation , she is just grabing the little money that middle class people own , which is very injustice . God should make her alright . we have to pray him . This is very unfair . TN should consider and withdraw this new rule immediately.

The TamilNadu Government has very good plan to loot peoples property, this is rediculous.

இது ரெம்ப அதிகம், என்னொட இடம் எக்கர் 5 லட்சம், யரும் வாங்க மாட்டானங்க.. ஆன இப்பொ அதொட மதிப்பு 15 லட்சம் .. எப்படி விக்கிரதுக்குன்னு தெரியவில்லெ..

There existed a long gap between the real value paid for purchasing land and land with building and the guideline value, suggesting that large amount of black money was in circulation by and large. The efforts of the Government would bring large amount of balck money into accounted money, for demand for properties never goes down in a fast developing country. A good economical solution too.
In the process a good amount of Income Tax also would get collected on another side. A timely attempt indeed: Viswanathan

In our area 3500 times the guideline value has been increased. i.e, Rs.1 crore and 75,00,000 -. If really the value fixed is correct and if the Govt. is ready to purchase the lands to this amount it is very very good price to us. N. Jeganathan

Better solution to reduce black money and real estate price, Government should ask source of income details before buy any assets. I know they won't implement which affect them(Politicians and government bribe officials).

நல்ல நடவடிக்கை???.. இதனால் பெரும்பாலான அளவு கறுப்பு பணம் குறையும்??...அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதே???...
செல்வி.ஜெயா அவர்களைவிட அவர் செய்யும் செயல்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் மிக அதிகமாக (வித்யாசமாக) யோசிக்கிறார்கள்?
குருவிபோல சேர்த்து 2 அல்லது 3 இலட்சங்களை கையில் வைத்துக்கொண்டு வங்கியில் கடனுக்கு அலைந்து "கனவு இல்லத்தை" வாங்க நினைப்பவனின் மீது ஏற்றப்பட்ட சுமைதான் இது...20 இலட்சத்துக்கு வீடு வாங்குபவன் 1 இலட்சம் பத்திரப் பதிவு செலவு செய்தான் (மொத்த செலவு 21 இலட்சம்), ஆனால் இப்பொழுது 10 இலட்சம் பத்திரப் பதிவு செலவு செய்வான் (மொத்த செலவு 31 இலட்சம்)...எங்கே போவான் மீதி 10 இலட்சத்துக்கு?
அரசாங்கத்தின் இந்த செயலால் கறுப்பு பணம் வைத்திருப்பவந்தான் பயனடைவான், ஏனெனில் இனி அவனுக்கு நிலம் வாங்க நடுத்தர வர்க்கத்தின் போட்டி கிடையாது, அவனுக்கு கோடிகள் என்பதும் சிறு துண்டுதான் அதனால் விலையேற்றத்தின் கவலையும் கிடையாது.
ஆனால் நடுத்தர வர்க்கத்தின் "கனவு இல்லம்தான்" "கனவாக" போகும்.

land value is too high in city areas. after implementing this rule, land definetly will fall because land registration value is expensive So many people will not demand the land Then land price will down.
Registration fee high --> demand will go down -->> ultimately land value will go down.

Unless government reduces the rates for the registration nothing will happen. Due to heavy stamp duty people are showing lesser value in sale consideration and government is getting less revenue. It is also producing more and more black money in our country.

To eradicate black money and create more revenue stamp duty need to be reduced to rock bottom level. No need to fix guide line value for registration actual values will need to placed in guide line value.

A separate fee for patta transfer fee need to be collected at register office as a single window policy. There by patta transfer bribes can be totally reduced. No person should be allowed to get patta transfer in person at revenue dept.

Leader like Madam Ms. Jayalalitha can bring this kind of tough decisions. But she is using her braveness for wrong things and not for good and developmental things.

நல்ல நடவடிக்கை. இதனால் பெரும்பாலான அளவு கறுப்பு பணம் குறையும். இன்றைய நிலையில் சென்னையில் ஒரு மனை வாங்கவேண்டுமெனில் கறுப்பாக 70% வரை கொடுத்தால் தான் வாங்க முடியும். இதற்கு லோனும் கிடைக்காது. அதே நேரத்தில் அதை விற்கவேண்டியிருப்பின் கறுப்பில் விற்றால் தான் தப்ப இயல்லும் அல்லது மிக அதிக அளவு டாக்ஸ் கட்டவேண்டிய சூழல். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதே.

வாழ்க தமிழ் மக்கள் செய்த மாற்றம்.

முத்திரைத் தாள் கட்டணம் அவசியமில்லாதது.பதிவிற்கான ஒரு சதவிகிதமே அரசுக்கு போதும்.அதுவே முறையும் கூட.
நில விலை தனி மனித விருப்பத்தை பொருத்தது.வழிகாட்டி மதிப்புக்கு மார்க்கெட் விலை என்றும் பொருந்தாது.ஏனெனில் ஒரே பகுதியில் இருந்தாலும் திசை, தனி மனித எதிர் பார்ப்பு முதலிய காரனஙகளால் ஒவ்வொரு சைட்டின் விலையும் தனி மனித விருப்பமே.அதே விலைக்கு பதிவு செய்ய வைக்கும் விதமாக பதிவுக் கட்டனம் மட்டும் பெற்றால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.இந்த துறை தன்னிறைவு அடையும். நில விற்பனையில் தேக்கம் இருக்காது.புதிய வழி காட்டி மதிப்பின் படி ஒன்பது சதவிகிதம் செலுத்தும் நிலையில் நில விற்பனையில் தேக்கமே உருவாகும்.

பதிவுக் கட்டனமான ஒரு சத விகிதம் மட்டும் செலுத்துவது உண்மை விலையையும், நில விற்பனை , சொத்து விவகாரங்கலில் சிக்கலில்லா நடை முறையையும் கொண்டு வரும்.

குற்றஙல் நிகழ்வது பெரும்பாலும் சொத்து தகராறிலேயே.அதுவும் இந்த மதிப்பு வித்தியாசம் சட்டத்துக்கு உட்பட்டாதாய் இல்லாத நிலையிலேயே.இந்த முயற்சி பலன் பெருகுவது ஒரு சதவிகித பதிவுக் கட்டனத்தால் மட்டுமே.முத்திரை தாள் அவசியமில்லை.

விற்பனை சேவையை அரசு எடுத்துக் கொள்வது வெளி நாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு நல்ல சேவையாய் அமையும்.இடைத் தரகர்களால் விளையும் இடையூறுகள் குறையும். நில அபகரிப்பு உள்ளிட்ட கட்சி அரசியல் இடயூறு அறவே நீஙகும்.

black money will reduce

ஆபு டா

திரு சி.சரவணன்,
உங்கள் சமூக அக்கறையை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். மிக நல்ல செய்திக் கட்டுரை.
வாழ்த்துக்களுடன்,
அ போ இருங்கோவேள்

நல்லா இருகுது

மிக முக்கியமான செய்தி. எச்சரிக்கை செய்துள்ள விகடனுக்கு நன்றி.....

Two way this could react: (1) if you believe your property value is less then you may be at advantage to pay less tax but I'm not sure any government will allow to refund, that too in India. On the other hand if they increase the tax percentage for more revenue to government treasury you may pay close or end-up with same tax amount. On the other hand, if you believe your property value is more then you are still at disadvantage of declaring more net property in your possession which could end-up more tax to government treasury, right?

However, if this comes, atleast unnecessary property ficticious increase will stop. But with gundas and greedy politicians around, land grabbing won't be stopped with this property value cap, am I right? Just want to know...

கவனத்தில் கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயக்கட்டுரை இதன் பிரதியை ஒவ்வொரு பத்திரப் பதிவு அலுவலகத்திலும் மக்கள் புழக்கம் மற்றும் பார்வைபடுமிடங்களில் பெரிய எழுத்துகளில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி
பிரசித்தம் செய்வது நல்லது.

ஒரு இடத்தின் மதிப்பு சைட் ஸ்பெசிஃபிக்.தனி நபர் விருப்பம் பொருத்தது.உதாரணமாக ஒரு இடம் பஸ் நிலயம், மார்கெட் அருகில் இருந்தாலோ கிழக்கு பார்த்து இருந்தாலோ அதன் மதிப்பு மற்ற இடஙளைக் காட்டிலும் அதிகம் இருக்கும்.ஒரு பகுதி நிலம் வைத்திருப்போர் விரிவான இடம் வேண்டி பக்கத்து நிலத்தையும் வாஙக முற்படும்போது அதிக விலையானாலும் கொடுக்க தயங்க மாட்டார்.எனவே இந்த வழிகாட்டி மதிப்பு விடுத்து சந்தை விலையை அப்படியே பதிவு செய்யவும், முத்திரைத்தாள் பதிவை 1% மாகவும் ஆக்கினால் இந்த துறை தன்னிறைவு அடைய போதுமானதாக இருக்கும்.அதிக நிதி சேர்ப்பு விரயத் திட்டங்களுகுக்கு காரணமாவதுடன் , மக்களுக்கிடையில் நியாயமில்லா பொருளாதார வளர்ச்சியால் மன அழுத்தம் உண்டாக காரணமாக இருக்கிறது.அரசு பதிவில் மட்டும் கவனம் செலுத்தினால் இடைத் தரகுகள், ரியல் எஸ்டேட் முதலியவை அளிக்கும் பொருளாதார அதிர்வுகள் இல்லாமல் போகும்.இது உண்மையிலேயே மிக நல்ல முடிவு.வழிகாட்டி மதிப்பு அவசியமில்லாதது.

அனைத்து தொழி துறை, தனியார் துறையிலும் வரிக்கு பதிலாக ஒரு பகுதி லாபம் அரசு பெற்றால் வரியில்லாத அரசு சாத்தியம்.வணிக யுத்திகளும் முறையாக நெறிப்படுத்தப்படும்.வரி நுகர் பொருளில் ஏற்றப்பட்டு தனி நபர் வருமானத்தை பாதிக்காது.சாதாரண மக்களும் முண்ணேற வழியாகும்.

கல்வி ஒரு தனி நபர் அபனுபவமும் திறனும் என்ற நிலை பெற்றால் இணைய வழிக் கல்வி சாத்தியம்.அப்போது கல்விக்கென ஒதுக்கப்படும் நிதி தனி நபர் சேமிப்பாய் மாறும்.சமூக இடர்பாடுகள் இன்றி ஒரு தனி நபர் வளர்ச்சி அவருடைய தனிப் பட்ட ஈடுபாடும், கவனமும் என்ற நிலை கொள்ளும்.

ஒரு அரசியல் வாதி தன் விருப்பமாய் கொடுக்கும் பொது நலத் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்காத நிலையில் தனி நபர் விருப்பஙகள் தக்க பின் புலத்துடன் பொது நலத்திட்டஙகளாய் மாற்றம் கொள்ளும்.அன்னிலையில் ஒவ்வொரு தனி நபரும் முற்போக்காக பொது நலத் திட்டஙகளில் உட்படுவார்.இன்னிலையில் அரசுக்கு இழப்பு இல்லை.

Displaying 1 - 21 of 21
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook